ப டுக்கை அ றை காட்சினா தனி ரேட் அதுவும் ரூ 1 கோடி தயாரிப்பாளர்களிடம் கறக்கும் புட்ட பொம்மா நடிகை…!!

நடிகை பூஜா ஹெக்டே படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கு தனி ரேட் அதாவது ரூ.1 கோடியை சம்பளமாக தயாரிப்பாளரிடம் கேட்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ்சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு திரை உலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஆலவைகுண்டபுரம்லு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.

இவர் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். நடிகை பூஜா ஹெக்டே அவ்வபோது தன்னுடைய பிகினி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றுவதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் நடித்து பிரபலமானதைவிட இம்மாதிரியான பிகினி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானது அதிகம் எனறே கூறலாம்.

அதுமட்டுமில்லாமல் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் நடித்த பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது. இதனால் அவர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கு மட்டும் தனி ரேட் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக இரண்டு கோடி கேட்கும் இடத்தில் 3 கோடியை சம்பளமாக கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலம் அவர் படுக்கையறை காட்சியில் நடிப்பதற்கு மட்டும் ரூ.1 கோடியை சம்பளமாக பெறுகிறார் என்றும் தெரியவந்துள்ளது. அவர் முந்தைய படங்களில் பெற்ற சம்பளத்தை விட 50% அதிகம் என்று கூறப்படுகிறது. நடிகை பூஜா ஹெக்டேவிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதன் விளைவாகவே அவர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

Comments are closed.