மஜ்னு திரைப்படத்தில் பிரசாந்த் க்கு ஜோடியாக நடித்த நடிகை எப்படி இருக்காங்க தெரியுமா

சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி படவாய்ப்பில்லாமல் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அந்தவகையில் பாலிவுட் சினிமாவில் பியார் மெய்ன் கபி கபி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிங்கி கண்ணா. பிரபல நடிகை டிம்பிள் மகளாக சினிமாவில் அறிமுகமானார்.அதன்பின் ட்சில படங்களில் நடித்து தமிழில் நடிகர் பிரசாந்தின் மஞ்னு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ் படங்களும் இந்தி படங்களும் நல்ல கதைகள் அமையாததால் 2003-ல் தொழிலதிபர் சமீர் சரண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பெண் குழந்தைக்கு தாயாகி லண்டனில் கணவருடன் செட்டில் ஆனார்.

இதையடுத்து ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது 42 வயதான ரிங்கி திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். மேலும் ரிங்கி அவரது அக்காவான டிவிங்கில் கண்ணாவின் பட நிகழ்வுகளுக்கு மட்டும் லண்டனிலிருந்து இந்தியாவிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சினிமா மட்டும் இல்லாமல் இந்தியா பக்கமே திரும்பாமல் இது போல இருக்கும் நடிகைகள் சினிமாத்துறையில் அறிமுகமாகி காணாமல் போய்விடுகிறார்கள்.தமிழில் மஞ்னு படம் பெரிய ஹிட் படமாக அமைந்தாலும் அடுத்த படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ரிங்கியின் குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Comments are closed.