பிரபல வில்லன் நடிகர் செந்தாமரையின் மனைவி யார் தெரியுமா..? அட அவரும் நடிகையா…!!

தமிழ்த்திரையுலகில் சிறந்த வில்லன்களை வரிசைப்படுத்தினால் நம்பிகார் தொடங்கி நாசர், ராதாரவி வரை பெரிய பட்டியலே போடலாம். அதில் நடிகர் செந்தாமரையும் முக்கியமான ஒரு இடத்தில் வருவார். செந்தாமரை நேரடியாக சினிமாவுக்கு வந்தவர் இல்லை. எம்.ஜி.ஆர், சிவாஜியோடு மேடை நாடகங்களில் நடித்து அவர்களின் கைபிடித்தே திரையுலகுக்கு வந்தவர் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர். மூன்று முகம் படத்தில் ரஜினிக்கு வில்லனாக அசத்தி இருப்பார் செந்தாமரை. தம்பிக்கு எந்த ஊரு தொடங்கி இவர் வில்லனாக ஜொலித்த படங்கள் ஏராளம்.

செந்தாமரை பீக்கில் இருந்தபோதே உடல்நலமின்றி காலமானார். இவரது மனைவியின் பெயர் கெளசல்யா. இவர் இப்போது பிஸியாக சீரியலில் நடித்து வருகிறார்.

பூவே பூச்சூடவா சீரியலில் யுவராணிக்கு தூபம் போட்டு கொழுத்திப் போடும் பாத்திரத்தில் வரும் கெளசல்யாவுக்கு இப்போது 72 வயது!சீரியலில் அம்மா ரோலில் வில்லத்தனத்திலும், குணச்சித்திரத்திலும் கலக்கிவரும் கெளசல்யா செந்தாமரையின் மனைவி என்பது பலருக்கும் தெரியாது.

 

Comments are closed.