தப்புனா தட்டி கேட்பேன்… நல்லதுனா தட்டிக் கொடுப்பேன்! கமலின் அதிரடி பஞ்ச்சுடன் வெளியான புதிய ப்ரோமோ… ஷாக்கான ரசிகர்கள்

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். இந்த நிலையில் இதன் நான்காவது சிசென் ஆரம்பமாகவுள்ளது இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடை பெற்று வருகின்ற நிலையில் தற்போது இதில் யார் யார் பங்கு பற்றுகிறார்கள் என்ற கிசு கிசுக்கள் வந்த வண்ணம் உள்ளது

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கமல்ஹாசன் பங்கேற்ற புரொமோ ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது லேட்டஸ்டாக புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.சொன்ன படி கேளு என்ற பாடலுடன் துவங்கும் இந்த ப்ரோமோவில் கமல் தனக்கே உரிய ஸ்டைலில் வர்ணனை செய்கிறார்.

இறுதியாக ‘தப்புனா தட்டி கேட்பேன், நல்லதுனா தட்டிக் கொடுப்பேன்’ என கமல் பஞ்ச் பேசுவதோடு அந்த புரோமோ முடிவடைகிறது.இந்த ப்ரோமோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகிரித்துள்ளது என்றே சொல்லலாம். குறித்த ப்ரோமோவை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

உங்கள் நான்

A post shared by Kamal Haasan (@ikamalhaasan) on

Comments are closed.