40 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் இப்படியா ?? மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் !!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா.திரையுலகில் வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.தற்போது அவருக்கு 40 வயதாகிறது. மாளவிகா குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில், கார்த்திக், அஜித், முரளி ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
அதே நேரத்திலேயே தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கத் தொடங்கியிருந்தார். மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’ பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம் அசரடித்தது.

மறுபடியும் மாளவிகாவின் சினிமா கேரியரில் படங்கள் வரிசையாக வரத் தொடங்கின. தொடர்ந்து வந்த ‘திருட்டுப் பயலே’ படத்தில் அவரது நெகட்டிவ் ரோல் மாளவிகாவுக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது. இதையடுத்து மறுபடியும் பிஸி ஆனார் மாளவிகா.தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த அவர் திடீரென சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார். சொன்னதோடு நில்லாமல், திருமணத்திற்குப் பிறகு நடித்த ஒரு படத்தில் கிளாமர் காட்சிகளிலும் நடித்துக் கொடுத்தார்.

மேலும், சில படங்களில் கெஸ்ட் ரோலில் தலையைக் காட்டியவர் அதன் பிறகு ஆளையே காணோம். தற்போது,உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்திவரும் இவர் தினமும் யோகா செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் மிகவும் கடினமான ஆசனம் ஒன்றை அசால்டாக செய்து அதனை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். nஇதனை பார்த்த ரசிகர்கள் 40 வயதில் இரண்டு குழந்தகளுக்கு தாயான பிறகும் இப்படியா..? என்று வியந்து வருகிறார்கள்.

Comments are closed.