செம ஸ்டைலிஷாக தோன்றும் கமல்ஹாசன்! அதிரடியாக வெளியான தமிழ் பிக்பாஸ் சீசன் 4 ப்ரோமோ

கடந்த 3 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், 3-வது சீசனில் முகென் ராவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.3 சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தமுறை கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது.

கடந்த மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரங்குக்குள் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் அமைக்கப்பட்டு புரமோ ஷூட் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கஅதில் செம ஸ்டைலிஷாக தோன்றும் கமல்ஹாசன், ”நோய் ஆபத்தானது தான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தான்.

அதற்காக வீட்டிலேயே வேலையில்லாமல் இருக்க முடியாது. உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி பாதுகாப்பாக இருப்போம்.இதோ நான் வந்துட்டேன். நீங்களும் வேலையை தொடங்குங்கள். நாமே தீர்வு. வேலையை ஆரம்பிக்கலாமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிக்பாஸ் விரைவில் என்ற அறிவிப்பும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழச்சியில் உள்ளனர்.ள் வெளியாகின

Comments are closed.