இணையத்தில் தீயாய் பரவும் விஜய்சேதுபதியின் புகைப்படம்… அப்படியென்னவாக இருக்கும்? புகைப்படம் உள்ளே!!

நடிகர் விஜய் சேதுபதி தனது 10 ஆம் வகுப்பில் எடுத்த குரூப் போட்டோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சி.பிரேம் குமார் இயக்கியுள்ள படம் 96. இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 10 ஆம் வகுப்பில் நண்பர்களாக இருந்தவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் கதையே 96 படமாக உருவாகியுள்ளது. பத்தாம் வகுப்பு புகைப்படம் விஜய் சேதுபதி
இந்நிலையில் அதை நினைவு கூறும் வகையில் விஜய் சேதுபதி தனது 10 ஆம் வகுப்பு குரூப் போட்டோவை டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுபோன்று நீங்களும் உங்களுடைய புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று நடிகை திரிஷா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் ரமேஷ் திலக், நடிகர் விக்ராந்த் ஆகியோருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

தனது 10 ஆம் வகுப்புப் புகைப்படத்தை, வெளியிட்ட விஜய் சேதுபதி அதில் தான் எங்கே நிற்கிறேன் என்பதை அடையாளம் காட்டத் த வறிவிட்டார். இதனால் ரசிகர்கள் கு ழம்பி வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments are closed.