உ யிரிழந்த நடிகர் முரளி டைரியில் எழுதியிருந்த முக்கிய தகவல்! அதன் பின் மனைவி செய்த நெ கிழ்ச்சி செயல்.!அப்படி என்ன நடந்தது தெரியுமா.?

பிரபல திரைப்பட நடிகரான முரளி உ யிரிழந்த நிலையிலும், அவர் கடன் பெற்றிருந்த 17 லட்சம் ரூபாயை மனைவி செட்டில் செய்த சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் முரளி. இவர் உ யிரிழந்த பின்பு, இவருடைய வாரிசான அதர்வா, திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், தற்போது நடிகர் முரளி குறித்து பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியம் நெ கிழ்ந்துபோய் ச ம்பவம் ஒன்றை பதிவிட்டுள்ளார்,

அதாவது நடிகர் முரளிக்கு டைரி எழுதும் ப ழக்கம் உண்டு. அதன் படி அவர் உ யிரிழந்த பின்பு, அவருடைய டைரி மூலம் தன் கணவர் வைத்திருந்த கடனைத் தெரிந்து கொண்டுள்ளார் ஷோபா.

இதில் பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு 17 லட்ச ரூபாய் க டன் கொடுக்க வேண்டும் என இருந்துள்ளது.

அதில் மனிதாபிமானத்துடன் முரளி இ றந்தவுடன், தன்னிடம் இருந்த பத்திரங்கள் அனைத்தையும் கி ழித்துப் போட்டுவிட்டார் திருப்பூர் சுப்பிரமணியம். சில நாட்கள் கழித்து, திருப்பூர் சுப்பிரமணியத்திடம் தொலைபேசியில் பேசிய ஷோபா, அவரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.

அவர் வீட்டுக்குச் சென்றவுடன், முரளியின் மனைவி ஷோபா 17 லட்ச ரூபாயை உள்ளே இருந்து எடுத்துவந்து கொடுத்துள்ளார். திருப்பூர் சுப்பிரமணியத்துக்கோ இது அ திர்ச்சியாக இருந்தது. அப்போது தான் முரளியின் டைரி தகவல்களைச் சொல்லியிருக்கிறார் மனைவி ஷோபா.

நான் பணமே கேட்கவில்லையே. அவர் கொடுத்த பத்திரங்களைக் கூட கிழித்துப் போட்டுவிட்டேன் என்று கூறியிருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம். அப்போது இதுவும் என் கணவர் பணம் தான். அவருடைய சம்பாத்தியத்தில் வாங்கிய இடத்தை விற்று, அவர் கடன் வாங்கிய ஆட்களுக்குக் கொடுக்கிறேன்.

முதலில் உங்களுக்கு ஏன் கொடுக்கிறேன் என்றால், நீங்கள் ஒருவர் மட்டும் தான் எங்களை அழைத்து கடன் எப்போது கொடுப்பீர்கள் என்று கேட்கவே இல்லை.

ஆகையால் உங்களுக்கு முதலில் கொடுக்கலாம் என்று அழைத்துக் கொடுக்கிறேன். தன் கணவர் யாருக்கும் க டனாளியாகச் சென்றுவிடக் கூடாது என்பது என் எண்ணம் என்று கூறியுள்ளார்.

மேலும், என் மகன் அதர்வாவை அழைத்து இவன் நாயகனாக நடிக்கவுள்ளான். ஆசீர்வாதம் பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறார் ஷோபா. அப்போது அதர்வாவும் திருப்பூர் சுப்பிரமணியத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.