நடிகை லக்ஷ்மி மேனனா இது? கிரங்கிப் போன ரசிகர்கள்…. இணையத்தை கதற விட்ட புகைப்படங்கள்

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கும்கி’ படத்தின் மூலம் தன்னுடைய 15 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, ‘சுந்தர பாண்டியன்’ படமும் வெற்றி பெற்றது. இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், கொம்பன், மஞ்சப்பை, ரெக்கை, என பல படங்களில் நடித்தார்.

ஆனால், புதிய நடிகைகளின் வரவால், லட்சுமி மேனன் மார்க்கெட் டல் அ டித்தது. இதனால், லட்சுமி மேனனும் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, சாகசம் போன்ற படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.தற்போது இவருடைய கைவசம், பிரபுதேவாவுடன் நடித்து வரும் யங் மங் சங் என்கிற படம் மட்டுமே உள்ளது. இந்த படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து நடித்திருந்தார் லட்சுமி மேனன்.

அந்த வகையில் நடிகை லக்ஷ்மி மேனனின் புதிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிரங்கி போயுள்ளனர்.
குண்டாக இருப்பதால் படவாய்ப்பு இல்லாமல் இருந்த லக்ஷ்மி மேனன் எடையை குறைத்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது, பரதம் ஆடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Comments are closed.