ரகிட ரகிட என்ற பாடலுக்கு குத்து டான்ஸ் போடும் ம ரணத்தின் விளிம்பில் இருந்த நடிகர் லோகேஷ் பாப் வைரல் வீடியோ உள்ளே!!

சின்னத்திரை நடிகர் நடிகைகள் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் வெள்ளித்திரையில் இடம் பிடித்து நடித்து வருகின்றனர்.அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த லோகேஷ் பாப் ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இவர் சில படங்களில் நகைச்சுவை வேடத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் லோகேஷ் பாப் பிரைன் ஸ்டாக் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து நடிகர் விஜய் சேதுபதியும் நேரில் சென்று அவர் எடுத்துக்கொள்ளும் சிகிச்சை பற்றி மருத்துவரிடம் விசாரித்து விட்டு வந்தார்.
உடல்நலம் சரியான பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்துள்ளார். மேலும் தொகுப்பாளர் ஆர் ஜே பாரதியுடன் இணைந்து ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரகிட ரகிட என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.

இந்த படத்தில் இசை அமைப்பாளரான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரின் நடனத்தைப் பார்த்து வியந்துபோனார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்ப்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

Comments are closed.