கட்டுனா மாப்பிள்ளையின் நண்பரை கட்டுவேன்! இல்லையெனில் திருமணத்தை நிறுத்துங்க அடம்பிடித்த மணப்பெண்! நடந்தது என்ன?

41

உத்தரபிரதேச மாநிலத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் கட்டுனா மாப்பிள்ளையின் நண்பரை கட்டுவேன்! இல்லையெனில் திருமணத்தை நிறுத்துங்க என்று அடம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நடந்தது என்ன வாங்க பார்க்கலாம். உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த பரபரப்பு நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடக்கவிருந்த நிலையில், திடீரென தாலிகட்டும் நேரத்தில் மணமகனுக்கு பதிலாக அவர் நண்பரை மணக்க விரும்புவதாக மணப்பெண் கூறி அனைவரையும் அ திரவைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் மிகப் பெரிய சண் டை ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து திருமணம் நடக்கவிருக்கும் இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரு வீட்டாருடன் மற்றும் மணப்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில் மணப்பெண் கூறியது என்னவென்றால், எனக்கு மாப்பிள்ளையின் நண்பருடன் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது, அவருடன் தான் போனில் பேசினேன் என குழப்பினார். அதன் பின்னர் மணப்பெண்ணுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மனதை மாற்றிய நிலையில் மணமகனையே அவர் மணக்க சம்மதித்தார். இதையடுத்து எவ்வித பிர ச்ச னையும் இன்றி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

மேலும், இந்த குழப்பத்திற்கு என்ன காரணம் என்று விசாரிக்கையில், மணமகள் மற்றும் குடும்பத்தார் இடையில் தான் சில குழப்பங்கள் இருந்தன. பின்னர் காவல்துறையினர் பேசிய பிறகு அந்த குழப்பம் நீங்கியது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் மிகுந்த பர பரப்பு ஏற்பட்டது.

Comments are closed.