அப்பா அம்மாவுக்கு கொரோனா !! ஆதரவு இன்றி தவித்த 6 மாத குழந்தை !! ஆனால் டாக்டர் அனிதா மேரி செய்த நெகிழ வைக்கும் செயல் !! என்ன தெரியுமா ??
கேரளா மாநிலம் கொச்சி நகரை சேர்ந்த தம்பதியினர் ஹரியானா மாநிலத்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குடும்பத்தலைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை பாதுகாப்பதற்காக அவர்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மாநில எல்லையில் வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டபோது தாய்க்கு மட்டும் நோய்தொற்று ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமலிருந்தது. மருத்துவ முகாமில் தாயுடன் குழந்தையை சேர்த்து வைத்திருந்தால் குழந்தைக்கும் நோய் தொற்று ஏற்பட்டுவிடும் என்று மருத்துவர்கள் அஞ்சியுள்ளனர். அதன்படி, அதே மருத்துவமனையில் ஆட்டிஸம் குழந்தைகளை பராமரித்து வரும் மருத்துவர் மேரி அனிதாவிடம் குழந்தையை ஒப்படைக்கலாம் என்று உயர்ரக மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இந்த சம்பவம் குறித்து மருத்துவ மேரி அனிதா கூறுகையில், “கவச உடையில் வந்த சிலர் என்னிடம் குழந்தை உன்னியை ஒப்படைத்தனர்.
குழந்தை பெற்றுக்கொண்ட உடனே நான் தனிமைப்படுத்தி கொள்ள முடிவெடுத்தேன். அதன்படி அப்பார்ட்மெண்டில் தனிமையாக இருந்து வந்தேன். முதன்முதலில் குழந்தை என்னிடம் வந்த போது அழுது கொண்டே இருந்தது. அதன் பின்னர் என்னுடன் இருக்க உண்ணி பழகிக்கொண்டான். மருத்துவர் மேரி அனிதா ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். மேரி அணிதாவின் கணவரே அவருக்கும், உன்னிக்கும் உணவு சமைத்து தருகிறார்.
தாய்க்கு உணவு தரும்போது மட்டுமே அவருடைய முகத்தை 3 குழந்தைகளும் பார்க்க இயலும். அப்போது மட்டுமே குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று கூறியுள்ளார்.இவருடைய இந்த தொண்டை போற்றும் வகையில் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.