24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்! காரணம் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க.!

ஜப்பானில் ஓய்வு பெற்ற தபால்துறையில் வேலை செய்த தபால்காரர் 24 ஆயிரம் கடிதங்களை வீட்டிலேயே பதுக்கி வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெரும்பாலான தகவல் பறிமாற்றம் போன் மற்றும் ஈமெயில் என்றே செல்கின்றது. ஆனாலும் முக்கிய நிறுவனத்தின் கடிதங்கள், வங்கி படிவம் மற்றும் பத்திரங்கள், வங்கி கடன் தொடர்பான கடிதங்கள் உள்ளிட்ட பலவகையும் தபால் மூலமாகவே அனுப்பப்பட்டு வருகிறது.அவ்வாறு அனுப்பப்படும் கடிதங்கள் வீடுகளை தேடிக் கொண்டு கொடுப்பதோடு அவர்களின் கையெழுத்தை வாங்கி வைத்துக் கொள்வது என்பது தபால்காரரின் பிரதான வேலையாகும்.

இந்த நிலையில் ஜப்பானின் டோக்யோ அருகேயுள்ள கனகவா பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தபால்காரர் ஒருவரை பொ லி ஸார் கை து செய்துள்ளனர்.குறித்த தபால்காரருக்கு தற்போது 61 வயதாகும் நிலையில், கடந்த 2003ம் ஆண்டு முதல் பல தபால்களை உரியவர்களிடம் கொண்டு சேர்க்காமல் வீட்டிலேயே பதுக்கி வைத்துள்ளார். இதில் 23,000 தபால்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

இதற்கு தபால்காரர் கூறிய காரணம் என்னவென்றால், வீடுகளை தேடிக் கண்டுபிடித்து கொடுக்க சிரமமாக இருந்ததால் 24 ஆயிரம் கடிதங்களை வீட்டிலேயே வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கடிதங்களை வீடு தேடி கொடுக்கமுடியவில்லை என்று தெரிவித்தால் தன்னை திறனற்றவர் என்று சக ஊழியர்கள் நினைத்துவிடுவார்கள் என்பதால் இந்த வேலையை பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.

தற்போது அனைத்து தபால்களும் உரியவர்களிடம் ம ன்னிப்பு கேட்டு ஒப்படைக்கப்பட்டு வருகின்றது. தபால்காரரிடம் வி சாரணைக்கு பின்பு த ணடனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.