டீச்சர் என்றும் பார்க்காமல் போலீசிடம் சிக்கிய 3 மாணவர்கள் ஆன்லைனில் பாடம் நடத்தியவருக்கு நேர்ந்தது என்ன

72

கொரோனா ஊரடங்கு காலத்தில் நடத்தப்பட்டுவரும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியை ஒருவர் பிரபலமாகியிருக்கும் செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலினால் நாடு முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள பள்ளிக்கூடங்கள் தற்போது வரை நாடு முழுவதிலும் தொடங்கப்படவில்லை.

இதனால் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வளவு பாதிக்கும் என்பது குறித்து பெற்றோர் கவலைக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் 1-ஆம் வகுப்பு ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு பாடம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார். இவருடைய பெயர் சாய் ஸ்வேதா. இவருடைய கணவர் வெளிநாட்டில் தங்கி பணிபுரிந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இவர் நேற்று தன்னுடைய ஆன்லைன் வகுப்பில், “டோரா புஜ்ஜி போனது; தங்கப்பூனை வந்தது” என்று மிகவும் அழகாக குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் முகபாவனைகளுடன் பாடம் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதிலும் ஒரே நாளில் இவர் பிரபலமாகிவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னுடைய பாடலான ” டோரா புஜ்ஜி போனது தங்க பூனை வந்தது” என்பதற்கு கிடைத்துள்ள அங்கீகாரத்திற்கு பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் எனக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இருப்பினும் சிலர் ஆசிரியை என்றும் பாராமல் என்னை மிகவும் இழிவுப்படுத்தி உள்ளனர். ஆனால் அவற்றை கண்டு பின்வாங்க வேண்டாம் என்று என்னுடைய கணவர் எனக்கு தைரியம் அளித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அவர்கள் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை பேணி பாதுகாப்பதற்காக ஆசிரியர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள ஆசிரியை சாய் ஸ்வேதா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவரை சமூக வலைத்தளங்களில் இ ழிவாக பேசியுள்ள மாணவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து சை பர் கிரைம் கா வல்துறையினர் 4 மாணவர்களை கை து செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர். கேரளத்து ஆசிரியையின் பாடம் நடத்தும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் வைரலாகி வருகிறது.

Comments are closed.