ஒரே இரவில் மில்லியனர்களாக மாறிய நபர்கள்… கிடைத்த வைரங்கள்! எப்படி தெரியுமா?

59

உலகில் ஒரே இரவின் மூலம் அடித்த அதிர்ஷ்டத்தால் மில்லியனர்களாக மாறிய சிலரைப் பற்றி தகவல்களை இங்கு பார்ப்போம். அமெரிக்காஅமெரிக்காவின் Arkansas பகுதியைச் சேர்ந்த Kevin Kinard என்ற 33 வயது நபர், சமீபத்தில் Crater of Diamonds மாநில பூங்காவில், ஒன்பது கல் காரெட் கொண்ட் வைரத்தை கண்டுபிடித்துள்ளார்.
ஆனால், ஆரம்பத்தில், அவர் அதை ஒரு கண்ணாடி கல் என்று நினைத்தார். ஆனால் அதன் பின் அது வைரம் என்று உறுதி செய்யப்பட்டது.கடந்த 1972-ஆம் ஆண்டு Crater of Diamonds பூங்கா திறக்கப்பட்டதில் இருந்து, கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது வைரம் இதுவாகும், இதற்கு கடந்த 1975-ஆம் ஆண்டு 16.37 காரெட் மதிப்புள்ள வைரம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது,

இந்தியா
மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தின், வைர சுரங்கத்தில் சுமார் 30 முதல் 35 லட்சம் வரை மதிப்புள்ள மூன்று வைரங்களை தொழிலாளி ஒருவர் கண்டுபிடித்து ஒரே இரவில் மில்லியனராக மாறினார்.
சுபல் என்று அடையாளம் காணபடும் அந்த நபர், வைரங்களை கண்டுபிடித்தபோது ஒரு ஆழமற்ற சுரங்கத்தில் தோண்டிக் கொண்டிருந்துள்ளார்.அப்போது இந்த வைரங்கள் அவருக்கு கிடைத்துள்ளது. இதன் நிகர எடை 7.5 காரெட் என பன்னா மாவட்ட வைர அதிகாரி ஆர் கே பாண்டே தெரிவித்தார். வைரங்களின் மதிப்பு 30 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இதே போன்று, மத்திய பிரதேசத்தின், பன்னா மாவட்டத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10.69 காரெட் கொண்ட மற்றொரு வைரத்தை ஆனந்திலால் குஷ்வாஹா என்பவர் கண்டுபிடித்தார்.
ராணிப்பூர் பகுதியில் இருக்கும் அந்த சுரங்கத்தில் 10.69 காரெட் வைரத்தை உள்ளூர் வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்ததாக பன்னாவின் வைர அதிகாரி ஆர் கே பாண்டே தெரிவித்துள்ளார்.இந்த வைரங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஒரே இரவின் மூலம் பணக்காரர்களாக, அதாவது மில்லியனர்களாக மாறியுள்ளனர்.

Comments are closed.