சினிமாவில் மேல வர முடியல.? அதான் இந்த மாதிரி கோமாளித்தனம் செய்கிறேன்.? பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர்..!!

235

ஆரம்பத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் அவருடன் நண்பனாகவோ அல்லது சிறிய நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வந்தவர் தான் கூல் சுரேஷ் என்பவர். இவர் சமீபகாலமாக பல திரைப்படத்தின் நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொண்டு வருகின்றார்கள்.

 

அந்த வகையில் சமீபத்தில் மன்சூர் அலிகான் தயாரித்து நடித்துள்ள சரக்கு என்ற திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று நடந்தது. அந்த வகையில் நிகழ்ச்சியில் கூல் சீரேசன் கலந்துகொண்டு உள்ளார். அப்பொழுது பேசிக் கொண்டிருந்த பொழுது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் ஒருவருக்கு மலர் மாலையை அணிந்துவிட்டார்.

 

உடனடியாக அந்த பெண் கோபமடைந்து அந்த மாலையை கழட்டி கீழே எரிந்துள்ளார். அவர் தற்பொழுது காமெடியாக செய்வதாக நினைத்து அப்படி செய்து உள்ளார். அதனை பார்த்து பல பத்திரிகையாளர்கள் அவரை விமர்சித்து பேசியுள்ளார்கள்.

 

அவர் விளையாட்டாக செய்த விஷயம் தற்பொழுது பெரிய ஒரு சர்ச்சையாக எழுந்துள்ளது. மேலும், பலரும் இதற்காக கண்டனம் தெரிவித்து வந்துள்ளார்கள். அந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் கூல் சுரேஷ் பெண் தொகுப்பாளரின் பெயர் எனக்கு தெரியவில்லை.

 

அவரிடம் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். அந்த சம்பவத்திற்கும் அண்ணன் மன்சூர் அலிகான் எந்த சம்பந்தமும் கிடையாது இது முழுவதும் என்னுடைய தவறுதான் என்று நான் ஒப்புக்கொள்கின்றேன். மேலும், நான் ஏன் இப்படி செய்தேன் என்றால் சினிமாவில் என்னால் மேலே வர முடியவில்லை.

 

அதனால், தான் நான் இந்த மாதிரி கோமாளித்தனமாக செய்து மக்கள் மத்தியில் பேசப்பட்டு. அதன் பிறகு எனக்கும் சினிமாவில் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று நான் இப்படி செய்து உள்ளேன் தவறாக முடியும் என்று நான் நினைக்கவில்லை என்று கூல் சுரேஷ் வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தான் இதோ…

 

 

Comments are closed.