தென்பாண்டி சீமையிலே.. அப்பா பாடிய பாடலை .. தன் வசீகர குரலில் பாடி அசத்திய ஸ்ருதி.. வைரல் வீடியோ !

34

நாயகன் படத்தில் வரும் தென்பாண்டி சீமையிலே பாடலை வித்யாசமாக பாடி சமூகவலைத்தளத்தில் டிரெண்டாக்கி உள்ளார் ஸ்ருதி ஹாசன்.

 

ஸ்ருதி நடிப்பதில் மட்டும் அல்லாமல் பாட்டு, நடனம் போன்ற பல துறைகளில் கை தேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல வெளிநாடுகளிலும் பலப்பல இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

கமல்ஹாசன் நடித்த பல படங்களில் இவர் பின்னணி பாடி அசத்தி இருப்பார். இந்த ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் ஸ்ருதி, நாயகன் படத்தில் வரும் தென்பாண்டி சீமையிலே பாடலை தன் பாணியில் பாடியுள்ளார். கீபோர்டு இசைத்தபடி சற்று வித்தியாசமான ராகத்தில், குரலில் ஏற்ற இறக்கம் கூட்டி மிகவும் அழகாக பாடி இருக்கிறார் ஸ்ருதி, அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த நாயகன் படத்தில் வரும் அந்த பாடலை பாடியவர் கமல்ஹாசன். அந்த பாடலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த பாடலை அவரது மகள் சற்று வித்யாசமான ராகத்தில், தனது பாணியில் பாடியுள்ளார். இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.

 

 

View this post on Instagram

 

I’ve always loved this song 🖤

A post shared by @ shrutzhaasan on

நடிகைகள் அனைவரும் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது போன்ற பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ருதி பாடல் பாடி வெளியிட்ட இந்த வீடியோ பெரும் அளவில் பகிரப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றது. பல பாசிட்டிவ் கமெண்ட்ஸும் வந்து கொண்டு இருக்கிறது. இவர் பாடுவதை பார்த்தால் அப்பாவை மிஞ்சிவிடுவார் போல இருக்கிறது என்று கருத்துகள் வருகின்றன.

Comments are closed.