எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் இவர்தானா.? மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இடத்தை இவர் பிடிப்பாரா.?

11,086

திடீரென்று ஏராளமான பிரபலங்கள் உயிரிழந்து வருவது ரசிகர்கள் மத்தியிலும் சக கலைஞர் மத்தியில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அப்படி இருக்கும் நிலையில் நேற்று மாரடைப்பு காரணமாக நடிகர் மாரிமுத்து என்பவர் உயிரிழந்து உள்ளார். மேலும், இவருடைய மறைவிற்கு பல பிரபலங்களும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வந்துள்ளார்கள்.

 

இதனை தொடர்ந்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த எதிர்நீச்சல் என்ற சீரியலில் மூலம் மிகப்பெரிய அளவு இவருக்கு ரசிகர்கள் உருவாக்கி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர் இயக்கம் முன்பாக இயக்குனராக இரண்டு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

ஆனால், அந்த திரைப்படம் இவருக்கு பெரிதாக மக்கள் மத்தியில் வரவேற்பு கொடுக்காத காரணத்தினால் முழுநேர நடிகராக மாறியுள்ளார். அந்த வகையில் ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார்.

 

மேலும், நேற்று மாலை மாரிமுத்துவின் உடலை அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி அளவில் அவருடைய உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இதனைத் தொடர்ந்து இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். மேலும், இனி அந்த கதாபாத்திரத்தில் அவருடைய இடத்தை யார் சரியாக இருப்பார் என்ற கேள்வி தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு வருகின்றது.

 

அந்த வகையில் அவருடைய இடத்திற்கு பிரபல நடிகர் வேள ராமமூர்த்தி என்பவர் தான் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை

 

மேலும், இவர் வெள்ளித் துறையில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் இப்படி இருக்கும் நிலையில் நடிப்பாரா என்ற சந்தேகம் இருந்து வருகின்றது. ஆனால், இவருடைய இடத்தில் இவர் நடிப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது…

 

Comments are closed.