சம்பளத்தை கொடுக்கவில்லை என்றால் நடிக்க மாட்டேன்.? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை..!!
இந்திய அளவில் தற்போது பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கியிருப்பவர் தான் நடிகை பூஜா ஹெக்டே என்பவர். இவர் ஆரம்பத்தில் சர்க்கஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் நடித்த அதன் பிறகு தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமுடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான
முதல் திரைப்படத்திலேயே தோல்வி படமாக அமைந்ததை தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். அதன் பிறகு அங்கு ஏராளமான சூப்பர் ஹிட் படத்தில் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த
பீஸ்ட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஒருவருக்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது இதற்கு அடுத்தபடியாக மீண்டும் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் அதிகமாக கவனத்தை செலுத்தி வருகின்றார். இவரைப் பற்றிய ஒரு சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் பூஜா கேட்கும் சம்பளம் தரவில்லை என்றால் அந்த திரைப்படத்தின் நடிக்க மாட்டேன் என்று கூறிவந்துள்ளார்கள். அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் பேட்டி ஒன்று கலந்து கொண்ட பொழுது கதை நன்றாக இருந்தாலும்
நான் கேட்ட சம்பளம் தராவிட்டால். அந்த திரைப்படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று பரவி வரும் தகவல் முற்றிலும் உண்மை கிடையாது. நான் பணத்தை மட்டும் குறிக்கோளாக வைத்து நடிக்கவில்லை. அப்படி இருந்தால் நான் இவ்வளவு தூரம் சினிமாவில் வளர்ந்திருக்க மாட்டேன்.
நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்த பெரிய சவாலாக இருந்து வருகின்றது. சம்பளத்தை முக்கியமாக வைத்து கிடைத்த படங்களில் நடிப்பதில்லை.. அப்படி நடித்திருந்தால் நான் எப்பொழுது சினிமாவில் இருந்து ஓடி இருப்பேன் என்று அவரைப் பற்றிய வெளிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்…
Comments are closed.