தளபதி 68 படத்திற்கு பிறகு விஜய் இடைவேளை எடுக்கப் போகிறாரா.? அதுவும் இத்தனை காலங்களாக.? அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள்..!!

35

தென்னிந்திய சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தென்னிந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகரின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்களை வந்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் கட்ட படவடிக்கை சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் அடுத்தபடியாக யாருடைய

 

இயக்கத்தில் நடிப்பார் என்று ரசிகன் கட்சியில் பெரிய ஒரு கேள்வியாக இருந்து வந்துள்ளது. அந்த வகையில் ஏ ஜி எஸ் தயாரிக்கும் விஜயின் அடுத்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கின்றது. மேலும், அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், அந்த திரைப்படத்தை குறுகிய கால கட்டத்திற்கு முடித்து திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என்று முடிவெடுத்துள்ளார்கள். அதன் பிறகு நடிகர் விஜய் கிட்டத்தட்ட ஒரு ஆறு மாத காலம் இடைவேளை எடுக்க போவதாக தெரிவித்துள்ளார்.

 

இதனைக் கேட்டவுடன் ரசிகர்கள் கண்டிப்பாக நடிகர் விஜய் அரசியலுக்கு தான் வரப்போகின்றார். அதற்கான வேலைகளை பார்ப்பதற்காக தான் இந்த இடைவேளை இருக்கின்றார் என்று தற்பொழுது பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. ஆனால், அது உண்மையா என்று இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை…

 

Comments are closed.