ரக்சனுக்கு இப்படி ஒரு அழகான ஜோடியா.? ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர்..!!

89

இந்த காலகட்டத்தில் இருக்கும் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியில் இருந்தவருக்கு தற்பொழுது பெரிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் ரக்சன். தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் வரை 2020 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் இவருக்கு நகைச்சுவையும் நடனமும் சிறப்பாக அமைந்த காரணத்தினால்

 

அவருக்கு ஏராளமான ரசிகர்கள் வந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து தற்பொழுது மறக்குமா நெஞ்சம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டு இருந்தா. மேலும், அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை மலினா என்பவர் நடித்து வருகின்றார்.

 

இவர் தமிழில் சிறுகதை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படம் கனா காணும் காலங்கள் போன்று இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றாக. மேலும், இவருடன் இணைந்து கலக்கப்போவது யாரு சிறந்த காமெடியான தீனா இந்த படத்தில் நடித்த வருகின்றார்…

 

Comments are closed.