பண கஷ்டத்தால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீடு மாற்றம்.? உணவுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படும் நடிகை..!!

439

கடந்த, சில ஆண்டுகளாக மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரம் பிடித்து விடுகின்றார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிய தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் என்ற திரைப்படத்தில்

 

மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 

தற்பொழுது அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார். இதனை தொடர்ந்து இவர் கர்நாடகாவில் ஏராளமான சொத்துக்கள் வாங்கி இருப்பதாக சமீபத்தில் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தான் அனுபவித்த பண கஷ்டத்தை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். நான் சிறுவயதில் தன்னுடைய பெற்றோர் பணக்கஷ்ட நெருக்கடியில் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்கள். பணம் இல்லாத காரணத்தினால்

 

வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தோம். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தங்களுடைய வீட்டை மாற்றிக் கொண்டே இருப்போம் என்று தனது வாழ்வில் நடந்த கஷ்டத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.