வேறு எந்த படத்திலும் விஜய் செய்யாத ஒரு விஷயம்.? லோகேஷ் படத்தில் முதன் முறையாக செய்துள்ளார்.?

48

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு கிட்டத்தட்ட 60% முடிந்துள்ளது மீதி உள்ள படப்பிடிப்பை சென்னையில் எடுத்து வருகின்றார்கள்.

 

மேலும், இந்த திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாக ஹாலிவுட் ரேஞ்சுக்கு உருவாகி வருவதாக கூறப்படுகின்றது. மேலும், இந்த திரைப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து  வருகின்றார்கள். அடுத்தடுத்து ஏராளமான நடிகர்களை லோகேஷ் படத்தில் அறிமுகம் செய்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் காதல் காட்சிகள் மற்றும் அறிமுக பாடலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. இப்படி ஒரு நிலையிலையோ படத்தில் பிரம்மாண்டமாக ஒரு பாடல் காட்சியை உருவாக்க திட்டமிட்டுள்ளார்கள்.

 

அதற்காக அந்த பாட்டில் கிட்டத்தட்ட 200 நடன கலைஞர்களை வைத்து எடுப்பதற்காக பட குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். கண்டிப்பாக இது திரையில் பார்க்கும் ரசிகர்களுக்கு பெரிய ஒரு பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், தமிழ்நாட்டில் ஆட்கள் இல்லை என்றால் மற்ற மாநிலங்களில் இருந்து நடன கலைஞர்களை தயார் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், நடிகர் விஜய் அது எதுவும் தேவையில்லை.? தமிழ்நாட்டை சேர்ந்த நடன கலைஞர்களாக மட்டும் தான் இருக்க வேண்டும். மேலும், ஆட்கள் பத்தவிலை என்றால் நடன பள்ளியில் படிக்கும்

 

மாணவர்களை இதில் நடனமாட வைக்கலாம். அவர்களுக்கு இது ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக கூட இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதுவரை நடிகர் விஜய் எந்த ஒரு பட குழு விஷயத்திலும் தலையிட்டு கிடையாது முதன்முறையாக இவர் தலையிட்டது தற்பொழுது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது…

 

Comments are closed.