23 வருட திருமண வாழ்க்கையை இப்படியா கொச்சைப்படுத்துவது.? தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய குஷ்பூ..!!

1,188

தமிழ் சினிமாவில் 80 மட்டும் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சிவக்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். மேலும், இவர் 2000 ஆண்டில்

 

இயக்குனரும் நடிகர் மன சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்போது இரண்டு மகள்கள் இருக்கின்றார். இப்படி ஒரு நிலையில் நடிகை குஷ்பூ நடிப்பதை முற்றிலுமாக நிறுத்தாமல்

 

ஒரு சில திரைப்படத்தில் மட்டும் நடித்துக் கொண்டு அரசியலில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றார். சமீபத்தில் குஷ்பூ சுந்தர் சி யை திருமணம் செய்து கொள்வதற்கு மதம் மாறினார் என்று ஒரு சில தகவல்கள் வெளிவந்தது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில்

 

தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் தன்னுடைய திருமணத்தை பற்றி விமர்சிப்பவர்கள் கொஞ்சமாவது அறிவு பெற்று கொள்ளுங்கள். அது கொஞ்சம் கூட இல்லாததால் தான் தன்னுடைய 23 வருட திருமண வாழ்க்கையை கொச்சைப்படுத்தி உள்ளீர்கள்.

 

நீங்கள் எல்லாம் நம் நாட்டில் இருக்கும் திருமண சட்டம் பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்று நான் நினைக்கின்றேன். நான் மதம் மாறவும் இல்லை.. அப்படி மாற வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. எனது 23 வருட திருமண வாழ்க்கையை நம்பிக்கை,

 

மரியாதை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உறுதியானது. மேலும், உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் தயவு செய்து மலை ஏறவும் இன்று அவர் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.