நடிகர் அஜித்தை மரியாதையில்லாமல் பேசினாரா வடிவேலு?.. 25 ஆண்டுகளாக வளரும் பகைக்கு இதுதான் காரணமா?

55

தமிழ் சினிமாவில் தல அஜித் தற்போது வசூல் நாயகனாக இருந்து பல லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வருகிறார். சமீபகாலமாக இவரது படங்களான விசுவாசம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வசூல் செய்து வருகின்றன. இதற்கு முன் நடித்த படங்கள் கதை நன்றாக இல்லாததால் வசூலில் ஓரளவு வெற்றியை பெற்றது. தோல்விகளுக்குப் பிறகு தான் தற்போது தொடர் வெற்றிகளை பார்க்க ஆரம்பித்துள்ளார். அதேபோல் காமெடியில் வடிவேலும் தமிழ் சினிமாவில் ஒரு சரித்திரத்தை நிகழ்த்தியுள்ளார். இன்று அவர் இல்லாத மீம்ஸ் இல்லை. எக்காலத்துக்கும் பொருந்தும் வகையான நகைச்சுவையை கொடுத்து அனைவரையும் கவர்ந்து விட்டார். படங்களில் ஹீரோவாக களமிரங்கிய காலமுதல் அவரின் நிலையும் மாறியது.

இப்படிப்பட்ட இரண்டு ஜாம்பவான்கள் சேர்ந்து நடித்த படம் தான் ராஜா. காதல் காமெடி கதையை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படத்தை எழில் இயக்கி இருந்தார். இந்த படமும் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நடித்திருந்த போது தல அஜித் மற்றும் வடிவேலு ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதை பலர் அறிந்த விஷயங்கள். ஆனால் இது எதற்கான சண்டை என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

தற்போது இருவரின் சண்டைக்கு என்ன காரணம் என்ற விடையை இயக்குனர் எழில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். வடிவேலுக்கு இயற்கையாகவே கிராமப்புறத்து காமெடி என்றால் ப யங்கரமாக செட் ஆகிவிடும். ஆப்படியான கதாபத்திரத்தில் வடிவேலு ராஜா படத்தில் அஜித்துக்கு மாமா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது கதைகேற்ப அஜித்தை வாடா போடா என்று அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வடிவேலு படப்பிடிப்பு முடிந்த பிறகும் அதே மாதிரி வாடா போடா என்று சகஜமாக அஜித்திடம் பழகியதாக தெரிகிறது.

அஜித் எப்போதுமே வாங்க போங்க என அனைவரையும் அழைத்து பழக்கம் உள்ளதால் வடிவேலு தி டீரென வாடா போடா என்று அழைத்தது அவருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் இயக்குனரிடம் சொல்லி வாடா போடா போன்ற வசனங்களை எடுக்கச் சொல்லியுள்ளார்.இதுபற்றி இயக்குநர் கூறியதும் வடிவேலு அப்படியெல்லாம் நடிக்க முடியாது என தெரிவித்து விட்டாராம்.

அப்போது வடிவேலுவின் மார்க்கெட் உ ச்சத்தில் இருந்த நேரம் 25 ஆண்டுகளாகியும் தற்போது வரை தல அஜித் மற்றும் வடிவேலு நடிக்காமல் இருக்க இதுதான் காரணம் என்று இயக்குநர் எழில் கூறியுள்ளார்.

Comments are closed.