20வயதில் Mr.Madras பட்டம் வென்றபோது நடிகர் சரத்குமாரின் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? அப்பவே இப்படி உடம்பா??

109

சரத்குமார் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார் .முன்னால் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார்.

சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயா இவர் சினிமா உலகிற்குள் வருவதற்கு முன்பே சாயாதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தினகரன் பத்திரிகையில் பெங்களூர் பிரிவில் வேலை பார்த்துள்ளார்.சினிமாவுக்குள் வந்த பின்னர் சரத்குமாருக்கு நக்மாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக சரத்குமாரை விட்டு சாயாதேவி பிரிந்து சென்று விட்டார் என்று கூறப்படுகிறது

இந்நிலையில், கடந்த, 1975-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ்டர். மெட்ராஸ் போட்டியில் வெற்றி பெற்றபோது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படு வைரலாகி வருகின்றது

Comments are closed.