பிரமாண்ட இயக்குனருக்கு இவ்வளவு அழகிய மகள்களா!! இவரது மகள்களும் அவருடைய சுவாரஸ்யமான வாழ்கையும் உள்ளே

பிரம்மாண்ட இயக்குனர் இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஜேம்ஸ் கேமரூன் என்று புகழப்படும் ஷங்கர். இப்படி எல்லாம் யாராவது யோசிப்பார்களா? என்று வியக்கும் அளவிற்கு கற்பனை திறன் கொண்டவர்.பாடலாசிரியர் எழுதும் ஒரு வரி அல்லது அதில் இடம்பெறும் ஒரு வார்த்தைக்கு கூட சிரத்தை எடுத்துக் கொண்டு அழகு சேர்க்க முனையும் ஒரே இயக்குனர் என்று நிச்சயம் ஷங்கர் அவர்களை கூறலாம். மேலும் சுஜாதாவின் மறைவிற்கு பிறகு ஷங்கர் அவ்வளவு தான் என்று சொன்னவர்களுக்கு முன் 2.Oவாக அப்க்ரேட் ஆகி வந்து நிற்கிறார் ஷங்கர்.
இயக்குனர் ஷங்கர் குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகளை இதில் பார்க்கலாம்..

என்ஜினியரிங்!
கும்பகோணத்தில் முத்து லக்ஷ்மி – சண்முகம் தம்பதிக்கு 1963ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி மகனாய் பிறந்தவர் ஷங்கர். இவர் அடிப்படையில் டிப்ளோமா மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர் ஆவார். இவர் டிப்ளோமா படித்து செண்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில்

குவாலிட்டி கண்ட்ரோல்!
திரை உலகத்திற்குள் நுழைவதற்கு முன் குவாலிட்டி கண்ட்ரோல் சூபர்வைசராக பணியாற்றி வந்திருக்கிறார். ஒருமுறை இயக்குனர் ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் நடத்திய நாடகம் ஒன்றை தற்செயலாக கண்ட இயக்குனர் எஸ்.எ. சந்திரசேகர், ஷங்கரை திரை உலகிற்குள் அழைத்து வந்ததாக பேசப்படுகிறது.

ரஜினி புகழ்
ஆரம்பத்தில் நாடகங்களில் பணியாற்றி வந்த போதிலிருந்து ஷங்கருக்கு ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசை தான் இருந்திருக்கிறது. ரஜினியே தனது பேட்டி ஒன்றில் ஷங்கர் நடித்து காண்பிக்கும் போது வியப்பாக இருக்கும். அவர் நடிப்பில் பாதியை கூட கொண்டுவர முடியாது. அவர் ஒரு சிறந்த நடிகர் என்று புகழந்து கூறி இருக்கிறார். ஆனால் காலம் அவரை இந்தியாவின் தலை சிறந்த இயக்குனராக உருவாக்கிவிட்டது.

நாடகம்!
எஸ்.எ. சந்திரசேகர் அவர்களிடம் திரைக்கதை மற்றும் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார் ஷங்கர். எஸ்.எ.சி மட்டுமின்றி, இயக்குனர் பவித்ரன் இடமும் ஷங்கர் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

உழைப்பு!
பொதுவாக திரைத்துறைக்குள் நுழைவது மிகவும் கடினம். அதிலும் இயக்குனர் ஆகும் வரை பொருளாதார ரீதியாக நிலையான இடத்தைப் பிடிக்க முடியாது என்பார்கள். ஆனால் ஷங்கர் தான் இணை இயக்குனராக இருக்கும் போது ஏறத்தாழ செட்டிலானவர் தான். அந்த அளவிற்கு அவர் உழைத்திருக்கிறார்.

வ ற் புறுத்தல்!
ஒரு கட்டத்தில் திரைப்படம் இயக்கும் ஆசையே ஷங்கருக்கு இல்லையாம். போதுமான அளவு இணை இயக்குனராக இருக்கும் போது சம்பாதித்துவிட்டதாக நினைத்திருக்கிறார் ஷங்கர். ஆனால் அவரை சுற்றி இருந்தவர்கள் தான் அவரிடம் இருக்கும் திறமையை அறிந்து படம் செய்ய சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள். அதன் பிறகு உருவானது தான் ஜென்டில் மேன்.

முதல் படம்
தமிழ் திரையுலகை இந்திய அளவிற்கும், இப்போது 2.O மூலமாக உலக சினிமா தரத்திற்கும் எடுத்து சென்றிருக்கும் ஷங்கர் முதன் முதலில் பணியாற்றியது ஒரு இந்தி சினிமாவில். ஆம்! எஸ்.எ. சந்திரசேகரின் ஜெய் ஷிவ் ஷங்கர் என்ற ராஜேஷ் கண்ணா நடித்த படத்தில் தான் முதன் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றினார் ஷங்கர்.

அரசியல் பேச்சு!

இப்போது அரசியல் பற்றி வசனங்கள் பேசினாலே அரசு இயந்திரம் எதிர்ப்பு தெரிவித்து திக்குமுக்காடி போக செய்கிறது. ஆனா தன் முதல் படத்தில் இருந்து தொடர்ந்து பல படங்களில் அரசியலை வலுவாக பேசியவர் ஷங்கர்.

சமூக அக்கறை கொண்டவர்
ஷங்கர் அவர்களுக்கு சமூகத்தின் மீது ஒரு பெரும் அக்கறை இருக்கிறது. அது அவர் படத்தின் கருவில் வலுவாக வெளிப்படுவதை அறிய முடியும். இல்லை என்றால் ஜெண்டில் மேன் இந்தியன், முதல்வன், சிவாஜி போன்ற படங்களை எவரால் எடுக்க முடியும்.

எளிமையானவர்
ஷங்கர் இந்திய சினிமாவில் பெரும் இயக்குனர்களில் ஒருவர். அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களிலும் ஷங்கர் முதல் இடத்தில் தான் இருக்கிறார். ஆனால் இன்றும் யாராவது அவரை தொடர்பு கொண்டு பேசினால், “ஹாய், ஐ எம் ஷங்கர், தி டைரக்டர்” என்று எளிமையாக அறிமுகம் செய்துக் கொள்ளும் பழக்கம் வைத்திருக்கிறார்.

பிரம்மாண்டம்!
ஷங்கர் ஒரு பிரம்மாண்ட இயக்குனர். ஆனால் அந்த பிரம்மாண்டம் அவரது இயல்பு வாழ்க்கையில் இருக்காது. இப்போதும் ஒரு கல்லூரி மாணவன் போல ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்துக் கொண்டு இயல்பாக தான் வெளியே வருவார். அவர் இயக்கும் படங்கள் மட்டும் தான் பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால் அவர் தயாரித்த அனைத்து படங்களும் சிறிய பட்ஜெட் படங்கள். கேட்டால் தன்னால் இயக்க முடியாத படங்களை தயாரித்து ரசிக்கிறேன் என்று கூறுவார்.

வெற்றி நாயகன்!
தமிழில் 25 ஆண்டுகளில் இவர் மொத்தம் 13 படங்கள் தான் இயக்கி இருக்கிறார். அவற்றில் ஒன்று கூற தோல்விப் படம் கிடையாது. எந்த ஒரு இயக்குனருக்கும் இப்படியான 100% வெற்றி சதவிதம் கிடையாது. தமிழில் பெரும் வெற்றி அடைந்த முதல்வனை இவர் இந்தியில் நாயக் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அந்த படம் தான் இவர் இயக்கத்தில் மோசமான ரிசல்ட் கண்ட ஒரே திரைப்படம்.

டெக்னாலஜி!
தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை புகுத்த யோசித்துக் கொண்டே இருப்பவர் ஷங்கர். உலக சினிமாக்களில் இடம்பெற்ற தொழில்நுட்பத்தில் பெரும்பகுதியை இந்திய சினிமாவிற்குள் கொண்டு வந்தவர், சோதனை செய்து பார்த்தவர் என்றால் அது ஷங்கராக மட்டுமே இருக்க முடியும்.

பட்டபெயர் வேண்டாம்!
பெரும் பட்ஜெட் படங்கள் மட்டுமே எடுத்து வந்ததால் இவரை இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்று அழைத்து வந்தனர். பிறகு எந்திரன் படம் துவங்கியதில் இருந்து இவரை இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்று அழைத்து வந்தனர். ஆனால் இந்த எந்த பட்டப்பெயரும் எனக்கு வேண்டாம் என்று புகழ் வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி ஷங்கர் சண்முகமாக இருக்கவே விரும்புகிறார் இயக்குனர் ஷங்கர்.

இந்த நிலையில் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள் அதில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் ஒரு ஆண் பையனும் உண்டு
அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், இளைய மகள் அதிதி ஷங்கர், மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர். இவர்களில் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது

Comments are closed.