தூங்கிக்கொண்டிருந்த விக்ரம் மகனிடம் நடிகை த்ரிஷா செய்த செயல்..! உண்மையை போட்டு உடைத்த துருவ்!
தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி.இந்த படத்தை பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இணைந்து “வர்மா” என்ற பெயரில் தமிழில் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். அதில் ஹீரோவாக விக்ரமின் மகன் விக்ரம் அறிமுகமாகிறார். ‘
இந்நிலையில் அப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து, படம் வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் வர்மா படத்தை பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய துருவ்விடம் உங்களுக்கு எந்த நடிகை பிடிக்கும் எந்த நடிகையோடு நடிக்க ஆசை? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், சிறுவயதில் இருந்தே எனக்கு திரிஷாவைதான் ரொம்பப் பிடிக்கும். ஆனால், இதுவரை அவரை நான் சந்தித்தது கூட இல்லை.
ஒருமுறை பிரிவியூ தியேட்டரில் இருந்தபோது நான் தூங்கிவிட்டேன். அப்போது அவர் வந்து என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு சென்றுவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
Comments are closed.