அடுத்த படத்தில் ஹீரோயினாக லொஸ்லியா… உடல் எடை அதிகரித்து வெளியிட்ட புகைப்படம்!
கடந்த ஆண்டு பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா .பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். இந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பிரபலமான வீரர் ஹர்பஜன் சிங். இவர் கிரிக்கெட் தவிர சினிமா படங்களிலும் நடித்து வருகிறார்.இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக லொஸ்லியா நடிக்கிறார்.
இவர்களுடன் இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகிய நிலையில் லொஸ்லியா அடுத்த படத்தில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
லொஸ்லியா கதாநாயகியாக கமிட் ஆகியுள்ள இந்த படத்தினை Axess film factory என்ற நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக புதுமுக நடிகர் பூரானேஷ் என்பவர் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெ எம் ராஜா சரவணன் என்பவர் இயக்க இருக்கிறார். இவரும் புது முக இயக்குனர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.