நயன்தாராவின் முன்னாள் காதலர் சிம்புவை பற்றிய உண்மையை உடைத்த விக்னேஷ்சிவன்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
நடிகர் சிம்புக்கு சினிமாத்துறையில் எப்பொழுதுமே ஏதாவது ஒரு விமர்சனங்களே எழுந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது என்பது தான். ஆனாலும் சில இயக்கினர்கள் இவரை பாராட்டி கொண்டு தான் இருக்கின்றனர்.இந்நிலையில், சிம்பு நயன்தாராவை காதலித்து பிரிந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.. அதன் பின்னர் சிம்பு ஹன்சிகாவை காதலித்து பிரிந்தார்.தற்போது, நடிகர் சிம்புவை பற்றி தற்போது நயன்தாரவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில், போடா போடி படத்தில் குழந்தை பிறந்ததற்கு பின்னர் சிம்பு ஒரு உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதற்கான முழு பாராட்டும் சிம்புவை தான் சேரும். நாங்கள் அந்த காட்சியை எழுதிய போது அது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எண்ணவில்லை. அந்த காட்சி படமாக்கப்பட்டது மூன்று மணிக்கு, அந்த காட்சிக்கு அனைத்தையும் தயார் செய்துவிட்டோம்.
சிம்பு அந்த காட்சியில் நடிப்பதற்க்கு முன்பாக தனக்கு ஒரு அரை மணி நேரம் நேரம் வேண்டும் என்று கூறினார். அதன் பின்னர் அவர் அந்த காட்சியில் கிலிசரின் கூட போடாமல் நடித்திருந்தார். அந்த ஒரு காட்சி போதும் ஒரு நடிகராக சிம்பு எப்படிப்பட்டவர் என்று என சிம்புவை பற்று புகழ்ந்து பேசியுள்ளார் விக்னேஷ் சிவன்.
Comments are closed.