மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய டாப் ஸ்டார் பிராஷந்த், உடல் எடையை குறைத்த புகைப்படம் இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் பென்னகள் மத்தியில் காதல் நாயகனாக வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் பிரஷாந்த்.தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய் மற்றும் தல அஜித் இருக்கும் அளவுக்கு இருந்த ஒரு நடிகர் தன் தவறான கதை தேர்ந்தெடுத்தல் காரணமாக தற்போது ஒரு படமாவது வெற்றி கொடுக்கவேண்டும் எனும் நிலைக்கு வந்துவிட்டார்.இந்நிலையில் எப்படியாவது ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை இயக்குனர் ஜெயம் ராஜா இயக்குவதால் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.மேலும் இந்த படத்தில் பிரசாந்துடன் முதல் முறையாக இணைந்து மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளார்களாம். நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா போன்ற முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டடு வருகிறது.
ஆனால் இதில் நயன்தாரா நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் பிரஷாந்த் அந்த படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளார், அந்த புகைப்படம் இதோ…
Comments are closed.