மூன்று எழுத்தில் மகளுக்கு பெயர் வைத்து அசத்திய நடிகர் நகுல்… என்ன பெயர் தெரியுமா? தெரிந்தால் ஷாக் அகிடுவீங்க!!
நடிகர் நகுலுக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், தங்களுடைய குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வதில் ஆழ்ந்த யோசனையில் இருந்த இவர்கள், ஒருவழியாக சூப்பர் பெயரை தேர்வு செய்து குழந்தைக்கு சூட்டியுள்ளனர்.“பாய்ஸ்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பியான நகுல். அந்த படத்தில் ஓவராக எடை போட்டு செம்ம குண்டாக இருந்தவர், அதன் பின்னர் தீ வி ர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் லுக்கிற்கு மாறினார். அதன் பின்னர் இவர் நடித்த “காதலில் விழுந்தேன்” படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டாக இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”, “மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தார். இடையே சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்றார்.
தற்போது தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள நகுலுக்கு குழந்தை பிறந்து அப்பாவாக ப்ரோமோஷன் வாங்கியுள்ளார். இதனால் இவருக்கு வாழ்த்துக்கள் சமூக வலைத்தளத்தில் குவிந்து வருகிறது.நகுலுக்கு குழந்தை பிறந்துள்ளது லாக் டவுன் நேரம் என்பதால், ஷூட்டிங் எங்கிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே தன் செல்ல குழந்தையோடு பொழுதை போக்கி வருகிறார்.
நகுல் மற்றும் அவருடைய மனைவி ஸ்ருதி இருவரும், தங்களுடைய குழந்தைக்கு மிகவும் வித்தியாசமான அழகிய பெயரை தேர்வு செய்ய ஆர்வம் காட்டி வந்த நிலையில், ஒரு வழியாக தற்போது 3 எழுத்தில் சூப்பர் பெயரை தேர்வு செய்து விட்டனர்.தங்களுடைய குட்டி தேவதையின் பெயர் அகீரா என, நகுல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு முன், தன்னுடைய மகளின் செல்ல பெயர் குல்பி என நகுல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.