மூன்று குழந்தைகள் விவாகரத்து வரை சென்ற திருமணம்!! கனடாவில் நடிகை ரம்பாவின் தற்போது எப்படி இருக்கிறார்?..

தமிழில் தொடையழகி என்று அழைக்கப்படும் ரம்பா 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான உழவன் என்ற படத்தில் சிறிய கதாபத்திரத்தில் நடித்து, அதன்பின் கார்த்தி நடிப்பில் வெளியான ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். ரஜினி, கார்த்திக், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். அப்போது தமிழ் சினிமாவில் இருந்த நடிகைகளுடன் ஒப்பிடுகையில், பக்கா ஸ்டைலிஷ் நடிகையாக திகழ்ந்தார் ரம்பா.
மாடர்ன் உடைகளில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த அவர், டிரடிஷனல் உடைகளையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக ’தொ டை அ ழகி’ என்ற பட்டத்தையும் ரசிகர்கள் ரம்பாவுக்குக் கொடுத்தனர். இதையடுத்து தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், சுந்தர புருஷன், காதலா காதலா உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, போஜ்புரி ஆகிய 6 மொழி படங்களில் நடித்து இருக்கும் ரம்பா, ‘திரி ரோசஸ்’ என்ற தமிழ் படத்தை தனது சகோதரர் வாசுவுடன் சேர்ந்து சொந்தமாக தயாரித்தார்.
இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு கனடாவில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இந்திரன் பத்மநாபன் என்பவரை காதலித்து கரம்பிடித்தார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில காலம் அவரிடமிருந்து விலகி இருந்தார். பிறகு பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொண்டு, மீண்டும் கணவருடன் இணைந்து வாழத் தொடங்கினார். தற்போது கனடாவில் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார் ரம்பா.

வர்களுக்கு லாண்யா, சாஷா என இரு பெண் குழந்தைகளும், ஷிவின் என்ற மகனும் உள்ளனர். திருமணமாகி சில ஆண்டுகளில் ரம்பா- இந்திரன் கருத்துவேறுபாடால் பிரிந்தாலும் குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒன்றிணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் இருவரின் காதல் மலர்ந்தது எப்படி என்று சுவாரஸ்யமான செய்தி வெளியாகியுள்ளது.கனடாவை சேர்ந்த மேஜிக் உட் நிறுவனத்தின் உரிமையாளர் தான் இந்திரன் பத்மநாதன். அவர் நிறுவனத்தில் ரம்பா பிராண்ட் அம்பாஸ்டராக பணியாற்றி வந்த போது இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தனது விருப்பத்தை ரம்பாவிடம் முதலில் கூறி சம்மதம் பெற்று, அவர்களது குடும்பத்தினரின் சம்மதத்தையும் பெற்றார் இந்திரன்.

மிகவும் வித்தியாசமான முறையில் தனது காதலை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக விமானத்தில் பறந்து சென்று நடுவானில் ரம்பாவுக்கு இ ன் ப அ தி ர்ச்சி கொடுத்துள்ளார்.இந்திரனின் அன்பை கண்டு சொக்கிப்போன ரம்பா திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் காதலுக்கு இரு குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்ட 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது.

அதன்பின் மூன்றாவதாக ஆண் குழந்தைக்கு தாயானார் ரம்பா. இந்நிலையில் தனது குடும்பப் படத்தை, இணையத்தில் வெளியிட்டுள்ளார். தோள் உயரத்திற்கு வளர்ந்த இரண்டு மகள்களும், கடைக்குட்டி மகனும் படு க்யூட்டாக இருக்கிறார்கள். மூன்று குழந்தைகளுக்கு பிறகும் ரம்பா பார்த்தபடியே இன்னும் இளமையாக தெரிகிறார்.தற்போது கணவருடைய நிறுவனத்திற்கு உதவியாகவும் பிராண்ட் அம்பாசிடராகவும் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பின்னர் நடிகை ரம்பா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு கனடாவில் செட்டில் ஆனார்.

 

View this post on Instagram

 

#cherishingeverymoment #familylove #birthday #june5

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on

 

View this post on Instagram

 

Gudmorning….in my space ,my kitchen 😍🥰

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on

Comments are closed.