16 வயதில் திசை மாறிய வாழ்க்கை! இளம் வயதில் நடிகை ஷகிலாவின் வாழ்க்கை நடந்த ஏமாற்றங்கள்?

பிரபல நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் வெளியாகியிருக்கிறது. இதை ஸ்ரீபதி பத்மநாபா, “ஷகிலா (ஓர் இதயத்தின் உண்மைக் கதை)” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.
அதில் ஷகிலா பகிர்ந்துள்ள சில விஷயங்கள் பின் வருமாறு, ‘ப்ளே கேர்ள்ஸ்’ என்ற என் முதல் படம் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய ஹிட் ஆனது இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. சில்க் ஸ்மிதாவுடன் நடித்த அந்த சினிமாவின் வெற்றி என்னை ஆனந்தத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. கோடம்பாக்கத்தின் ஒரு சாதாரண இளம்பெண்ணாக இருந்த நான் தென்னிந்தியா முழுக்க அறியப்பட்டுவிட்டேன். அந்த மகிழ்ச்சியை குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டேன். நடிப்புலகில் நுழையும்போது எனக்கு பதினேழு வயது .

நடிப்பில் விருப்பமிருந்தும் அதுவரை நான் யாரிடமும் வாய்ப்புக் கேட்டு செல்லவில்லை. யாருடைய காலையும் பிடிக்கவில்லை. ஆனாலும் சினிமா உலகம் என்னைத் தேடி வந்தது. மற்ற கஷ்ட நஷ்டங்கள் ஏதுமில்லாமல் சினிமாவில் நுழைய முடிந்ததற்காக தெய்வத்துக்கு நான் நன்றி சொன்னேன். என்னுடைய மார்கெட் உ ச்சத்தில் இருந்த நேரம் என்னை ஒரு படம் நடிக்க வேண்டும் என்று அழைத்து சென்று காட்சிகளை படமாக்குவார்கள்.

ஆனால், ஒரே படம் என்று கூறி நிறைய காட்சிகளை படமாக்கி அவற்றை வேறு வேறு படங்களில் இணைத்து நான்கு, ஐந்து படங்களாக ரிலீஸ் செய்வார்கள். ஆனால், எனக்கு ஒரு படத்தில் நடித்தற்கான சம்பளம் தான் கொடுக்கப்படும். இப்படியெல்லாம் நான் ஏ மாற்றப்பட்டுள்ளேன்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பும் சினிமாவில் புகழ்பெற்ற பின்பும் என் வாழ்க்கையில் சில விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக நான் எங்கேயும் கீழ்ப்படியவில்லை. யாருக்கும் இரையாகவில்லை என்று ஷகிலா கூறியுள்ளார்.

 

Comments are closed.