விஜய் டிவி தொகுப்பாளனி பிரியங்காவின் கணவரை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்..!!
இந்த காலகட்டத்தில் சினிமாவைப் போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என்று கூட ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் பிரியங்கா தேஷ் பாண்டே என்பவர்.
இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும், இவர் சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில்
தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில ஆண்டுகள் வேலை செய்து அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் சன் மியூசிக் போன்றவற்றில் பணியாற்றி வந்துள்ளார். அதில் பெரிதாக எந்த ஒரு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால்.
அதிலிருந்து வெளியேறி விஜய் தொலைக்காட்சியில் வந்து தற்போது ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். சமீபத்தில் கூட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருவரும் கலந்து கொண்டுள்ளார்.
இப்படி பிரபலமாக இருக்கும் பிரியங்காவின் கணவரின் புகைப்படத்தை முதன்முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது…
Comments are closed.