மகள் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட தந்தை… கண்கலங்க வைத்த காரணம்…

மகள் திருமணத்தன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவபிரசாத். இவருக்கு நீது என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நீதுவிற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை சாத்தனூர் பகுதியில் இருக்கும் ஆனந்த விலாசம் பகவதி கோவிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்தின் போது மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அவள் கேட்ட நகையை அப்படியே போட வேண்டும் எனவும், மாப்பிள்ளை வீட்டாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் எனவும் நகை எடுப்பதற்காக தன்னுடைய வீடு மற்றும் நிலங்களை விற்க முடிவு செய்துள்ளார்.

ஆனால் அந்த முயற்சிகள் திருமணம் நெருங்கும் வேலையில் தோல்வியடைய கடும் விரக்தியில் இருந்துள்ளார், இதற்கிடையில் அவர் வங்கியில் வாங்கிய கடனுக்காக வங்கி அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இதை அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காலை 5.30 மணிக்கு திருமணத்திற்காக உறவினர்கள் பலரும் கூடியிருக்கும் நிலையில், சிவபிரசாத் பாத்ரூமிற்கு சென்று திரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பாததால், உறவினர்கள் பலரும் அவரை தேடியுள்ளனர். இறுதியில் தன்னுடைய பழைய வீட்டில் சிவபிரசாத் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இருப்பினும் இது குறித்து மகளிடம் தெரிவிக்காமல் இந்த திருமணத்தை உறவினர்கள் நடத்தியுள்ளனர். மாப்பிள்ளை வீட்டார் அந்த அளவிற்கு நகைகள் போட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை என்று இவரின் சூழ்நிலையை அறிந்து முன்பே தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் சிவபிரசாத் எடுத்த திடீர் முடிவு அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *