பிக்பாஸ் வீட்டிற்கு வரப்போகும் இரண்டு புதிய போட்டியாளர்கள் யார் தெரியுமா…? ஷாக் ஆன கவீன்-ஷாக்சி…வந்தது யார் தெரியுமா..?

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. முதல் நாளான ஞாயிற்று கிழமை போட்டியாளர்களின் அறிமுகம் நடைபெற்றது.தற்போது ஒரு நாளை கழித்துள்ள போட்டியாளர்கள் மத்தியில் தற்போது சில அனல் பறக்கும் விவாதங்கள் கிளம்பியுள்ளது.

இன்று வெளியான முதல் புரோமோவில் சாக்க்ஷி மற்றும் இந்த வார தலைவியான வனிதாவிற்கு இடையே சாப்பாடு விஷயத்தில் ஒரு சூடான வாக்கு வாதம் நடைபெற்றது.அடுத்து வெளியான புரோமோவில் மோகன் வைத்யா தனது தனிப்பட்ட பிரச்சனைகளை எண்ணி அழுது புலம்பினார்.இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியானது.

அதில் பிக்பாஸ் வீட்டின் மெயின் டோர் திறக்கிறது. அப்போது சகப் போட்டியாளர்களுடன் ஆடிக் கொண்டிருந்த கவீன் மற்றும் ஷாக்‌ஷி மெயின் டோர் திறப்பதைக் கண்டு, அதில் நின்று கொண்டிருந்த நபரை பார்த்தவுடன் லைட்டாக ஷாக் ஆகினர்.

இதனால் இன்றைய நிகழ்ச்சியில் யாரோ ஒருவர் வருகிறார் என்று தெரிகிறது.அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் அல்லது மிர்னாலினி கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக நமக்கு தகவலும் கிடைத்துள்ளது.

தற்போது பிக் பாஸ் வீட்டினுள் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்த சீசனில் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ஏற்கனவே கமல் தெரிவித்திருந்தார். இதனால் இன்று வரப்போவது பவர்ஸ்டாரா இல்லை மிர்னாலியா என்பதை தான் நாம் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *