சைட் அடித்த சாண்டி…! கடுப்பான பாத்திமா…! பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீக்கப்பட்ட காட்சிகள்…

விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமாகியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது.கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஹாட் ஸ்டாரின் பிக் நைட் மசாலா, மார்னிங் மசாலா என்று சில விடீயோக்களை ஒளிபரப்பி வந்தனர்.

ஆனால், இது போன்று இந்த சீசனில் எதுவும் தற்போது வரை ஒளிபரப்பப்படவில்லை. இருப்பினும் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கட் செய்யபட்ட காட்சிகளை ஹாட் ஸ்டாரின் வெளியாகியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் நாள் என்பதால் போட்டியாளர்களுக்கு சில ஜாலியான டாஸ்க் வழங்கப்பட்டது.

அந்த வகையில் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு அந்த அமர்ந்து கொண்டு ஒரு போட்டியாளரை அவர்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக கேள்விகளை கேட்க வேண்டும்.அதற்கு அந்த போட்டியாளர் கோபப்படாமல் பதிலளிக்க வேண்டும்.

அவர் அளிக்கும் பதில் மற்ற போட்டியாளர்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் அவர்களை மாலை அணிவித்து மீண்டும் குழுவில் சேர்த்துக் கொள்ளலாம்.அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் பாத்திமா பாபுவிற்கு, மதுமிதா டாஸ்க் ஒன்றை கொடுத்தார். அது மட்டும் தான் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

ஆனால், அதன் பின்னர் தொலைக்காட்சியில், பாத்திமா பாபுவிற்கு கொடுத்த டாஸ்கை நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை. ஆனால், தற்போது அந்த காட்சிகள் ஹாட் ஸ்டாரில் இடம்பெற்றுள்ளது.அதில் சாண்டி பாத்திமா பாபுவிடம், நான் உங்களை சைட் அடிக்க போகிறேன், அதற்காக நீங்கள் என்னை லோக்கலாக கலாய்க்க வேண்டும் என்று கூறுகிறார்.

அதற்கு ஓகே சொல்கிறார் பாத்திமா பாபு. அதன் பின்னர் பாத்திமாவை சைட் அடிப்பது போல சாண்டி செய்கை செய்ய அதற்கு பாத்திமா பாபுவும் ஏற்றார் போல சாண்டியை மிரட்டுவது போல கோபப்பட்டார். இதனை காணும் போது உண்மையாகவே இருவரும் சண்டை போடுவது போன்றே தோன்றியது.

அதன் பின் இருவரும் கை குலுக்கி நண்பரகளாகிக் கொண்டனர். இருப்பினும் இந்த டாஸ்க்கில் சாண்டி செய்த செயலால் உணமையில் பாத்திமா கடுப்பானது போல் தெரிகிறது.இதைப் பற்றி எப்படியும் பாத்திமா மற்ற போட்டியாளர்களிடம் பேசுவார். அப்போது தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *