இரு பெண்களுடன் சென்னைக்கு வந்து லாட்ஜில் தங்கிய ஆசிரியர்… அங்கு வந்த அவர் நண்பர் கண்ட காட்சி…!

வெளியூரில் இருந்து சென்னைக்கு மனைவி, காதலி, மகளுடன் வந்து லாட்ஜில் தங்கி விஷம் குடித்த ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் லாட்ஜில் நேற்று முன்தினம் ஒரு சிறுமி, 2 பெண்களுடன் ஒரு ஆண் அறை எடுத்து தங்கினார். நேற்று காலை அவர்கள் தங்கிய அறை வெகு நேரமாகியும் திறக்காததால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் 4 பேரும் மயக்கம் அடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பொலிசார் நால்வரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்த விசாரணையில் தற்கொலைக்கு முயன்றவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெகத் பிராங்கிளின் (30), அவருடைய மனைவி புனிதா ராணி (29), 6 வயது மகள் ஜெசிபி ஆகியோர் என்பதும், இன்னொரு பெண் பக்கத்து வீட்டை சேர்ந்த வைகுண்ட ரமேஷ் மனைவி சரண்யா (22) என்பதும் தெரிய வந்தது. இந்நிலையில் பிராங்கிளின் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமி உட்பட 3 பேரும் மயங்கிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது அதாவது, பிராங்கிளின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். அவரது பக்கத்து வீட்டில் சரண்யா வசித்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

பிராங்கிளின் ஊருக்கு வரும்போதெல்லாம் சரண்யாவை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இவர்களது ரகசிய உறவு இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இருவரும் ஊரை விட்டு வெளியேறுவதும், பொலிசார் உதவியுடன் உறவினர்கள், இருவரையும் அழைத்து வந்து அறிவுரை கூறி அனுப்பி வைப்பதும் அடிக்கடி நடந்துள்ளது. இதற்கிடையே தான் பிராங்கிளின், தன்னுடைய மனைவி புனிதா ராணி, மகள் ஜெசிபி, சரண்யா ஆகியோருடன் சென்னையில் உள்ள தங்கும் விடுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார் என்று பொலிசார் தெரிவித்தனர்.

ஜெகத் பிராங்கிளின் தன்னுடைய மனைவி, மகள், கள்ளக்காதலியை அழைத்துக்கொண்டு சென்னை வந்ததாகவும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அனைவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விஷம் குடித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சென்னைக்கு குடும்பத்துடன் வந்த பிராங்கிளின், தன்னுடைய நண்பர் அர்ஜூன் என்பவரை விடுதிக்கு வரவழைத்துள்ளார். அர்ஜூன் வந்து பார்த்தபோது, பிராங்கிளின் சற்று மயங்கிய நிலையில் இருந்ததாகவும், மற்றவர்கள் குளியல் அறையில் கதவை பூட்டிக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அர்ஜூன் கேட்டதும், பிராங்கிளினும் குளியல் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டதாகவும், விடுதி ஊழியர்கள் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையில் சிகிச்சை பெற்று வரும் புனிதா ராணி, சரண்யா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் கண்விழித்து வாக்குமூலம் அளித்தால் தான் இது குறித்த சரியான உண்மை தெரியவரும் என நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *