அக்கா என்று கூட பாராமல்,கதற கதற தம்பி மற்றும் தந்தை செய்த செயல் – இறுதியில் நேர்ந்த கொடூரம்..!!!

தற்போது சமூக பிரச்சனைகளை விட உறவு சார்ந்த பிரச்சனைகள் தான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளசுகள் காதல் விவகாரங்களை பெரும்பாலூம் தற்போது கையில் எடுத்து ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த வயதான முதியவர்கள் கலாச்சாரம் என்ற பெயரில் செய்யும் செயல்கள் அதிர்ச்சியை சிலநேரம் ஏற்படுத்துகிறது, இப்படி தீனி மாவட்டத்தில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் தனது அக்காவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட காரணத்தால் அவரை கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார் தம்பி.தேனி அருகே உள்ள கோட்டூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பையா – பேச்சியம்மாள் தம்பதியினருக்கு மகதி என்ற மகளும், வீரா என்ற மகனும் உள்ளனர்.மகதிக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. ஆனால் கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

மகன் வீரா வேறு ஊரில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், மகள் மகதி நடத்தையில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊரில் இருந்து வந்திருந்த மகன் வீரவிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது வாக்குவாத்தின்போது எரிச்சலடைந்த வீரா மற்றும் அவரது பெற்றோர் கத்தியை எடுத்து மகதியை குத்தியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே மகதி உயிரிழந்தார்.சம்பவம் நடந்தவுடன் வீரா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். சம்பவம் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து கருப்பையா மற்றும் பேச்சியம்மாளை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *